வைசேடிக வாதம்
ADVERTISEMENTS
ஆட்டினா ளவனையு மாக்கிச் செல்பவள்
வீட்டினார் நெறியென விரித்த மேலையோர்
காட்டினார் பலருளுங் கணாத னேயெனு
மீட்டினா னுலோகன திடத்தை யெய்தினாள்.
வீட்டினார் நெறியென விரித்த மேலையோர்
காட்டினார் பலருளுங் கணாத னேயெனு
மீட்டினா னுலோகன திடத்தை யெய்தினாள்.
783
ADVERTISEMENTS
வனப்புடை மாதரைக் கண்டு மாதவன்
சினப்புடைக் கருத்தின ளென்னச் சிந்தித்தே
நினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையை
மனக்கொளக் கிளக்குவேன் மன்னுங் கேளென.
சினப்புடைக் கருத்தின ளென்னச் சிந்தித்தே
நினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையை
மனக்கொளக் கிளக்குவேன் மன்னுங் கேளென.
784
ADVERTISEMENTS
நெறியெனப் படுவது நின்ற மெய்ம்மையங்
கறிதலுக் கரியன வாறு சொற்பொருள்
செறியயான் சொலிற் றிரப்பியங் குணந்தொழில்
பொறியினாய் பொதுசிறப் புடன் புணர்ப்பதே.
கறிதலுக் கரியன வாறு சொற்பொருள்
செறியயான் சொலிற் றிரப்பியங் குணந்தொழில்
பொறியினாய் பொதுசிறப் புடன் புணர்ப்பதே.
785
பூதமைந் தொடுதிசை மனம்பொ ழுதுயி
ரோதினப் பொருள்கடா மொன்ப தாமவை
நீதியிற் குணமவற் றியல்பு செய்கையும்
போதரும் பொருட்புடை பெயர்ச்சி யாகுமே.
ரோதினப் பொருள்கடா மொன்ப தாமவை
நீதியிற் குணமவற் றியல்பு செய்கையும்
போதரும் பொருட்புடை பெயர்ச்சி யாகுமே.
786
பெரியதும் பின்னது மாய தப்பொது
உரிதினிற் பொருள்களைச் செலுத்து மொற்றுமை
தெரிவுற வருவது சிறப்ப தாங்குணக்
கிரியைக ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே.
உரிதினிற் பொருள்களைச் செலுத்து மொற்றுமை
தெரிவுற வருவது சிறப்ப தாங்குணக்
கிரியைக ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே.
787
ஆறின் முதன்மூன் றத்தி மற்றவற்
றீறின் மும்மையு மின்மையை யெய்தின
கூறின பொருள்களுங் குணனுஞ் செய்கையும்
வேறென விரித்தனன் விசேட வாதியே.
றீறின் மும்மையு மின்மையை யெய்தின
கூறின பொருள்களுங் குணனுஞ் செய்கையும்
வேறென விரித்தனன் விசேட வாதியே.
788
தத்துவ மிவையெனத் தலையுந் தூக்கினாட்
கொத்ததன் றோவென வுரைநல் லாயினி
யித்தவ மிப்பொரு டேறி யான்செயிற்
பொய்த்தவ மாதலிற் போவ னென்னவே.
கொத்ததன் றோவென வுரைநல் லாயினி
யித்தவ மிப்பொரு டேறி யான்செயிற்
பொய்த்தவ மாதலிற் போவ னென்னவே.
789
மெய்ந்நெறி யிதுவென விரிப்பக் கேட்டிருந்
திந்நெறி யமைதியின் றென்னுஞ் சொல்லினாய்
பொய்ந்நெறி யாதலைத் தேற்றிப் போகெனக்
கைந்நிறுத் தாளது காட்டக் கேளென.
திந்நெறி யமைதியின் றென்னுஞ் சொல்லினாய்
பொய்ந்நெறி யாதலைத் தேற்றிப் போகெனக்
கைந்நிறுத் தாளது காட்டக் கேளென.
790
நிலமுதற் பூதமாய் நின்ற நான்மையுங்
குலமுதன் மூர்த்தியாய்க் கூறி னொன்றவை
யலமுதற் பொருள்களாய்ப் பன்னி னாயவை
வலமுறை யிடமுறை வருதல் காட்டுகோ.
குலமுதன் மூர்த்தியாய்க் கூறி னொன்றவை
யலமுதற் பொருள்களாய்ப் பன்னி னாயவை
வலமுறை யிடமுறை வருதல் காட்டுகோ.
791
உரியதோர் நீரணைந் துப்ப தாகுநெய்
யெரியெழு முளர்ச்சியா லிரைக்குங் காற்றதாம்
பெரியதோ ருருமுநீர்ப் பிண்டம் வந்துநீ¡;
வரிசையிற் படலமாய் வந்த வல்லவோ.
யெரியெழு முளர்ச்சியா லிரைக்குங் காற்றதாம்
பெரியதோ ருருமுநீர்ப் பிண்டம் வந்துநீ¡;
வரிசையிற் படலமாய் வந்த வல்லவோ.
792
ஒலியதன் குணமென வுரைத்தி யாதலால்
வலியுடை நிலையில மற்றெப் பூதமும்
ஒலியொடு முதறம்முட் புல்ல லின்மையாற்
கலிசெய லொழிகநின் காய மென்றனள்.
வலியுடை நிலையில மற்றெப் பூதமும்
ஒலியொடு முதறம்முட் புல்ல லின்மையாற்
கலிசெய லொழிகநின் காய மென்றனள்.
793
சுட்டின திசைத்திறஞ் சொல்லிற் சூரியன்
பட்டது மெழுந்ததும் பற்றி நான்குமாய்
யெட்டெனப் பலவென வின்ன தன்மையாற்
கட்டினர் வழங்கினுங் காய மெய்துமே.
பட்டது மெழுந்ததும் பற்றி நான்குமாய்
யெட்டெனப் பலவென வின்ன தன்மையாற்
கட்டினர் வழங்கினுங் காய மெய்துமே.
794
மண்டிலம் பலரையு நிறுவி மத்திமங்
கொண்டுநின் றான்றிசை கூறு மின்னென
வெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற்
கண்டில நின்பொருள் காட்ட வல்லையோ.
கொண்டுநின் றான்றிசை கூறு மின்னென
வெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற்
கண்டில நின்பொருள் காட்ட வல்லையோ.
795
அத்திசை யவனுமா யல்ல னும்மென
வெத்திசை யவர்களு மிசைப்பி னேகநீ
பத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமே
சித்தியு முடிவெனச் சேர்ந்து வாழ்தியே.
வெத்திசை யவர்களு மிசைப்பி னேகநீ
பத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமே
சித்தியு முடிவெனச் சேர்ந்து வாழ்தியே.
796
மன்னுமம் மனமெனப் படுவ தாவதே
யின்னுயி ருருவினோ டியைந்த வொற்றுமை
யின்னுமக் காலமு மிருமைத் தாகலி
னின்னுடைப் பொழுதவ ணிற்ற லில்லையே.
யின்னுயி ருருவினோ டியைந்த வொற்றுமை
யின்னுமக் காலமு மிருமைத் தாகலி
னின்னுடைப் பொழுதவ ணிற்ற லில்லையே.
797
குணங்களுந் தொழில்களுங் கூறி வேறெனிற்
பிணந்தனைச் சீவனாய்ப் பெற்ற தென்னையோ
வுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி னுறுதிநாம்
புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே.
பிணந்தனைச் சீவனாய்ப் பெற்ற தென்னையோ
வுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி னுறுதிநாம்
புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே.
798
எப்பொரு ளெக்குணத் தானு மில்லையே
லப்பொரு ளக்குணத் தயல தாதலாற்
செப்பிலக் குளிரினாற் றீய துண்மைபோற்
றுப்பெனப் பொருள்களுந் தோற்ற மில்லையே.
லப்பொரு ளக்குணத் தயல தாதலாற்
செப்பிலக் குளிரினாற் றீய துண்மைபோற்
றுப்பெனப் பொருள்களுந் தோற்ற மில்லையே.
799
குணத்தொடு குணிகளைக் கூறி வேறெனப்
புணர்ப்பதோர் பொருளினை வேண்டிற் பொய்யெனிற்
குணத்தொடு குணிகளுங் கூட்ட மின்மையா
லுணர்த்துதற் கரிதவை யுளவு மல்லவே.
புணர்ப்பதோர் பொருளினை வேண்டிற் பொய்யெனிற்
குணத்தொடு குணிகளுங் கூட்ட மின்மையா
லுணர்த்துதற் கரிதவை யுளவு மல்லவே.
800
ஒன்பதுந் தத்தும துண்மை யாற்பல
வென்பது மெனைத்தென வெண்ணப் பட்டதும்
வன்பிதன் குணமிது வென்னப் பெற்றது
மன்பதற் குடைமையி னறியப் பட்டதே.
வென்பது மெனைத்தென வெண்ணப் பட்டதும்
வன்பிதன் குணமிது வென்னப் பெற்றது
மன்பதற் குடைமையி னறியப் பட்டதே.
801
அதனது குணமதற் கயல தாதலா
லிதனது குணமென விழுக்கிற் றென்னையோ
உதனமு முணர்விலை யொன்ற தென்றக்கால்
விதனமும் படாயது மெய்யு மாகுமே.
லிதனது குணமென விழுக்கிற் றென்னையோ
உதனமு முணர்விலை யொன்ற தென்றக்கால்
விதனமும் படாயது மெய்யு மாகுமே.
802
கெடக்கெடும் பொருளெனிற் கேடு முண்டெனப்
படப்பெறு மதற்குநி பரிவ தென்னையோ
வடக்குந்தன் றோற்றமு மொட்டி மும்மைய
மடக்கிலு மதுபெரி தழகி தாகுமே.
படப்பெறு மதற்குநி பரிவ தென்னையோ
வடக்குந்தன் றோற்றமு மொட்டி மும்மைய
மடக்கிலு மதுபெரி தழகி தாகுமே.
803
குணங்கடாங் குணியெனுங் கூற்று முண்மையிற்
பிணங்கலாய்ப் பொருள்வயிற் பேறு முள்ளதே
யிணங்கலா யிருமைய தின்மை யுண்மையும்
வணங்கலாம் வகையதோர் மாட்சி மிக்கதே.
பிணங்கலாய்ப் பொருள்வயிற் பேறு முள்ளதே
யிணங்கலா யிருமைய தின்மை யுண்மையும்
வணங்கலாம் வகையதோர் மாட்சி மிக்கதே.
804
பண்பினாற் பொருள்களுக் காய பல்பயஞ்
செண்பினா னறிவினான் செறிவி னானென
மண்பொனாற் குணநிலைக் காய மாட்சியா
நண்பினா னல்லது நடத்த லில்லையே.
செண்பினா னறிவினான் செறிவி னானென
மண்பொனாற் குணநிலைக் காய மாட்சியா
நண்பினா னல்லது நடத்த லில்லையே.
805
விலைபெறு நன்மையால் வெறுப்ப தீமையால்
கொலைபெறுங் களவினாற் குணத்தி னக்குண
நிலைபெறும் பொருளினா னின்ற வொற்றுமை
யலைபெறும் வேறெனி னாவ தில்லையே.
கொலைபெறுங் களவினாற் குணத்தி னக்குண
நிலைபெறும் பொருளினா னின்ற வொற்றுமை
யலைபெறும் வேறெனி னாவ தில்லையே.
806
நல்வினைப் படுதலுந் தீவினைப் படுதலும்
பல்வினைப் பாகினாற் பயங்க ளெய்தலு
மில்வினைக் குணங்கடா மென்றும் வேறெனிற்
சொல்லில சுழற்சியும் வீடுந் தோற்றமே.
பல்வினைப் பாகினாற் பயங்க ளெய்தலு
மில்வினைக் குணங்கடா மென்றும் வேறெனிற்
சொல்லில சுழற்சியும் வீடுந் தோற்றமே.
807
ஆட்டுடை யாடன வாட றாங்களு
மோட்டுடைக் குதிரையு மோட்டு மென்றின்ன
கூட்டிய வப்பொருட் கொடைய வாதலான்
மீட்டவை யொன்றென வேண்டல் வேண்டுமே.
மோட்டுடைக் குதிரையு மோட்டு மென்றின்ன
கூட்டிய வப்பொருட் கொடைய வாதலான்
மீட்டவை யொன்றென வேண்டல் வேண்டுமே.
808
கூத்த ராடலுங் குதிரை யோடலு
மோத்துரை யுள்பட வொழிந்த யாவையு
நீத்தன வேயல்ல நிலையு முண்மையிற்
போத்தரல் வேண்டினப் பொழுதி னாகுமே.
மோத்துரை யுள்பட வொழிந்த யாவையு
நீத்தன வேயல்ல நிலையு முண்மையிற்
போத்தரல் வேண்டினப் பொழுதி னாகுமே.
809
பிணங்கல வாய்த்தம்முட் பிறக ளாகிய
குணங்களுந் தொழில்களுங் குழுமிக கெட்டன
புணர்ந்துடன் பொருள்வயிற் போந்த வாறுநீ
யுணர்ந்திலை யதுவுநின் னுடைய தேபிற.
குணங்களுந் தொழில்களுங் குழுமிக கெட்டன
புணர்ந்துடன் பொருள்வயிற் போந்த வாறுநீ
யுணர்ந்திலை யதுவுநின் னுடைய தேபிற.
810
பாதுவெலாப் பொருளொடும் பொருந்தி நின்றதே
லதுவெலாப் பொருள்களை யாக்கு மொற்றுமை
யிதுவலா லவைதம்மு ளியைத லில்லையேல்
செதுவலாம் பிறவது சென்ற தென்றலே.
லதுவெலாப் பொருள்களை யாக்கு மொற்றுமை
யிதுவலா லவைதம்மு ளியைத லில்லையேல்
செதுவலாம் பிறவது சென்ற தென்றலே.
811
அன்றியும் பொதுவது வந்தமில் பொருட்
சென்றதே யென்றலாற் சிதர்ந்து பன்மையாய்க்
குன்றியுங் கூடியு நின்றுங் கொள்பய
மின்றியும் போதலா லென்னை யாயதோ.
சென்றதே யென்றலாற் சிதர்ந்து பன்மையாய்க்
குன்றியுங் கூடியு நின்றுங் கொள்பய
மின்றியும் போதலா லென்னை யாயதோ.
812
பொதுவெனப் படுவதோர் போலி யாதலாற்
பொதுவெனப் படுவன போன்ற தாங்களே
யதுவென மீட்டிருந் தாறென் றெண்ணுவா
யிதுவென வென்னையிங் கிதனோ டேழெனாய்.
பொதுவெனப் படுவன போன்ற தாங்களே
யதுவென மீட்டிருந் தாறென் றெண்ணுவா
யிதுவென வென்னையிங் கிதனோ டேழெனாய்.
813
சிறப்பெனப் படுவது தெரியி னப்பொரு
ளறப்பெற நின்றவக் குணம தாதலின்
இறப்பவு மிதுதன தின்மை யேயினாய்
புறப்படுத் திடுவனுன் பொருள ளெண்ணலே.
ளறப்பெற நின்றவக் குணம தாதலின்
இறப்பவு மிதுதன தின்மை யேயினாய்
புறப்படுத் திடுவனுன் பொருள ளெண்ணலே.
814
கூட்டினா லல்லது கூட்ட மில்லையேற்
கூட்டுவான் செல்வதுங் கூட்ட மில்லையே
பாட்டினாற் பலவுமாம் பயமி லாதன
மூட்டினா லுரைத்தியோ முனிவு போக்கிதோ.
கூட்டுவான் செல்வதுங் கூட்ட மில்லையே
பாட்டினாற் பலவுமாம் பயமி லாதன
மூட்டினா லுரைத்தியோ முனிவு போக்கிதோ.
815
கொக்கொடக் கருமையைக் கூட்டு வித்தலுஞ்
சுக்கொடத் துவர்ப்பினைத் துன்னு வித்தலுஞ்
சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீயென
நக்கன ளளியனோ நயவ னென்னவே.
சுக்கொடத் துவர்ப்பினைத் துன்னு வித்தலுஞ்
சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீயென
நக்கன ளளியனோ நயவ னென்னவே.
816
என்றுமப் பொருள்களு மியல்புந் தங்களோ
டொன்றென வருதலா லொன்று மாகுமே
யென்றலி லிருமையுந் தெரியி னின்மையா
லின்றினிக் கூட்டுவ தில்லை யில்லதே.
டொன்றென வருதலா லொன்று மாகுமே
யென்றலி லிருமையுந் தெரியி னின்மையா
லின்றினிக் கூட்டுவ தில்லை யில்லதே.
817
ஒன்றுநற் பொருள்கடாங் குணங்க டாம்பல
வென்றுநீ யேகம் வேறென்ப தென்னெனப்
பொன்றுமக் குணமெனிற் பொருட்கு மாமென
நன்றினிக் குணமுண்மை நாட்ட மாமென.
வென்றுநீ யேகம் வேறென்ப தென்னெனப்
பொன்றுமக் குணமெனிற் பொருட்கு மாமென
நன்றினிக் குணமுண்மை நாட்ட மாமென.
818
குணிக்கணா னோக்கினாற் குணங்க ளில்குணத்
தணிக்கணா னோக்கினா லதுவு மன்னதே
பிணிக்கலாம் பிரிக்கலாம் பெற்ற நான்மையிற்
றுணிக்கலாந் துருநெறி துன்னு நன்மையே.
தணிக்கணா னோக்கினா லதுவு மன்னதே
பிணிக்கலாம் பிரிக்கலாம் பெற்ற நான்மையிற்
றுணிக்கலாந் துருநெறி துன்னு நன்மையே.
819
இல்லையக் குணங்குணிக் குண்மை தானெனச்
சொல்லினக் குணிகுணத் தொன்று மாதலா
லல்லதக் குணங்களு மவைக ளாமென
நல்லதித் துணிவென நயத்தி லெய்தினான்.
சொல்லினக் குணிகுணத் தொன்று மாதலா
லல்லதக் குணங்களு மவைக ளாமென
நல்லதித் துணிவென நயத்தி லெய்தினான்.
820
பொருளொடக் குணந்தொழிற் குண்மை யொன்றெனத்
தெருள்வது மும்மையிற் றெரிய வைப்பது
மருளுடை யறநெறி யண்ணல் சேவடி
யிருள்கெட நினைத்தலு மினையை யாகென.
தெருள்வது மும்மையிற் றெரிய வைப்பது
மருளுடை யறநெறி யண்ணல் சேவடி
யிருள்கெட நினைத்தலு மினையை யாகென.
821
ஓம்படுத் துலோகனை யொழியச் சொல்லியான்
காம்புடைக் கடநெறி கடப்ப னென்னவே
பேம்படுப் பவரொடும் பிரிவின் னாமையைத்
தேம்படு கிளவிநீ சிந்தி யென்னவே.
காம்புடைக் கடநெறி கடப்ப னென்னவே
பேம்படுப் பவரொடும் பிரிவின் னாமையைத்
தேம்படு கிளவிநீ சிந்தி யென்னவே.
822
ஒக்குமவ் வுரையென வுள்ள தேயென
நக்கன ளாகிய நாதன் சேதியஞ்
சிக்கென வேத்துதல் சிறந்த தென்னவே
தக்கதென் றவன் சொலத் தானு நீங்கினாள்.
நக்கன ளாகிய நாதன் சேதியஞ்
சிக்கென வேத்துதல் சிறந்த தென்னவே
தக்கதென் றவன் சொலத் தானு நீங்கினாள்.
823
வைசேடிக வாதம்